Skip to main content

சிதம்பரம் அருகே பஸ் பாஸ் கேட்டு கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்!

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
சிதம்பரம் அருகே பஸ் பாஸ் கேட்டு
கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்!



சிதம்பரம் அருகே சி.முட்லூரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு மாணவர்கள் காலை, மாலை என இரு பாடவேலை முறையில் கல்வி பயின்று வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் பெரும்பாலன மாணவர்கள் பேருந்துகள் மூலம் வந்து கல்வி பயின்று செல்கிறார்கள். இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பஸ் பாஸ் புதுபித்து கொடுக்கவேண்டும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்க வேண்டும் என சம்பந்தபட்ட அலுவலகத்தில் விண்ணபித்துள்ளனர். பின்னர் இது குறித்து அதிகாரிகளிடம் நேரிலும் வலியுறுத்தியுள்ளனர். இது நாள் வரை அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. மாணவர்கள் பழைய பஸ் பாஸை நடத்துனரிடம் கொடுக்கும் போது அவர் ஏற்க மறுக்கிறார். இதனால் கிராமபுற ஏழை எளிய மாணவர்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் புதன்கிழமை பஸ் பாஸ் கேட்டு கல்லூரியின் வெளிபுறத்தில் உள்ள சிதம்பரம்–கடலூர் புறவழிச்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த ஆய்வாளர் அம்பேத்கார்,உதவி ஆய்வாளர் இளையராஜா உள்ளிட்டவர்கள் நேரில் வந்து மாணவர்களிடம் உங்கள் போராட்டத்தால் பல பேர் அவதி அடைந்துள்ளனர். அதில் உங்களின் நெருங்கிய உறவுகாரர்களாக கூட இருக்கும். எனவே பஸ் பாஸ் கிடைக்க ஒரு மணி நேரத்தில் ஏற்பாடுகள் செய்கிறேன் என்று மாணவர்களின் நெஞ்சை தொடும் விதத்தில் பேசினர்.  அதனை ஏற்ற மாணவர்கள் போராட்டத்தை விலக்கிகொண்டு கல்லூரியின் வெளியில் நின்றனர்.

இதனை தொடர்ந்து ஆய்வாளர் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து சிதம்பரம் பணிமனை மேலாளர் சுந்தரத்திடம் இது குறித்து தகவல் தெரிவித்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த அவர் மாணவர்கள் பழை பாஸை காட்டி பேருந்தில் பயணிக்கலாம். முதலாம் ஆண்டு மாணவர்கள் பாஸ் வாங்க பணம் கட்டிய ரசீது இருந்தால் அதனை காட்டிவிட்டு பயணம் செய்யலாம் என்று எழுதி கொடுத்தார். பின்னர் இது குறித்து நடத்துனரிடம் பிரச்சனை எதுவாக எனக்கு தகவல் கொடுங்கள் என்று மாணவர்களிடம் அவரது செல் நெம்பரை கொடுத்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அனைவரும் வகுப்புக்கு சென்றனர்.  

- காளிதாஸ் 

சார்ந்த செய்திகள்