
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பாஜகவினர் நேற்று இடப்பங்கீடு தொடர்பாக பேசினார்கள். அதேபோல் திமுகவுடன் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடங்களை திமுக மாவட்ட செயலாளர்கள் வரும் 31ம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைமை அறிவுறுத்தியது. இந்நிலையில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடலூர், தருமபுரி, விழுப்புரம் மாட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.