/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_255.jpg)
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி நேற்று முன் தினம்(13.05.2025) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தண்டனை விவரம் 12 மணிக்கு வழங்கப்படும்” என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து நன்பகல் 12.30 மணியளவில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தனித் தனியாக தண்டனை விவரங்கள் வாசிக்கப்பட்டது. அதில், “9 குற்றவாளிகளும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு தமிழக முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி வழக்கில் நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்குத் தொடுத்த அன்றைய அதிமுக அரசு. குறிப்பாக இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்தது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர்கள் மீது தொடர்ந்து வழக்கு இப்போதும் தொடர்வது நியாயம் இல்லை. ஆகவே தோழர்கள் மீதான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற உரிய நடவடிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)