Skip to main content

70 ஆண்டுக்கு பிறகு மின்சார வசதி பெற்ற கிராமம்

Published on 30/09/2017 | Edited on 30/09/2017
70 ஆண்டுக்கு பிறகு மின்சார வசதி பெற்ற கிராமம்

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின் 200 பேர் வசிக்கும் குக்கிராமத்திற்கு மின்சாரம்,பஸ் வசதி கிடைத்துள்ளதால் அந்த கிராமமே மகிழ்ச்சியில் உள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ளது அம்தேலி குக்கிராமம் . இந்த கிராமம் மகாராஷ்டிரம்-தெலுங்கானா மாநிலம் எல்லையில் உள்ளதால் இங்குள்ளவர்கள் தெலுங்குமொழி பேசுகின்றனர். 

மலைப்பாங்கான பகுதியாக உள்ளதால் தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல்வாதிகள் இங்கு வந்து செல்வர். பின்னர் தோற்றாலும், ஜெயித்தாலும் இந்த கிராமத்தின் பக்கம் அவர்கள் வருவதே இல்லை. நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும் மின்சாரம், போக்குவரத்து என அடிப்படை வசதிகள் கூட கிராம மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜே அம்ப்ரிஷ்ராவ் மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து 45 லட்சம் ரூபாயை அம்தேலி கிராமத்திற்காக ஒதுக்கியிருந்தார். இதனையடுத்து, அம்மாநில மின்சார வாரியம் அக்கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியுள்ளது. மேலும், அருகிலுள்ள நகரத்தில் இருந்து கிராமத்திற்கு போக்குவரத்து வசதியும் செய்துள்ளது. 

சார்ந்த செய்திகள்