/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sd_11.jpg)
பீகார் முதல்வரின் மருமகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் மற்றும் அவரது அனைத்து குடும்ப உறுப்பினர்களும் வழக்கமாக பீகார் மாநில முதல்வர் தங்கி இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார்கள்.
தற்போது முதல்வரின் வீட்டில் தங்கி இருக்கும் உறவினர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனை ஒன்றின் தனி வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல்வரின் வீடு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் முதல்வரின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து வெண்டிலேட்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக, அவரது இல்லம் மருத்துவமனையாக மாற்றப்பட இருக்கின்றது. மாநில சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவின்படி, பாட்னா மருத்துவ கல்லூரி இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)