மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களா, சுமார் ஏழரை லட்சம் ரூபாய் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி பாக்கி தொடர்பாக சமூக ஆர்வலர் ஷகீல் அகமது ஷேக் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மும்பை மாநகராட்சி மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் இதர அரசியல் தலைவர்கள் 8 கோடி ரூபாய் வரை வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

MAHARASTRA STATE CM

Advertisment

அதில் அதிகப்பட்ச வரிப்பாக்கியை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களா மட்டும் 7 லட்சத்து 44 ஆயிரத்து 981 ரூபாய் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அம்மாநில அமைச்சர்களான சுதிர் முங்கந்திவார், வினோத் தவ்தே, பங்கஜா முண்டே, ஏக்நாத் ஷிண்டே, ராம்தாஸ் கதம் உள்ளிட்ட 18 மகாராஷ்டிரா அமைச்சர்களின் பெயர்களும் குடிநீர் வரி செலுத்தாத வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.