Landslide in Shimla peoples toll rises to 17

Advertisment

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பருவமழை காரணமாகக் கடந்த சில மாதங்களாகக் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு அளவுக்கு மிஞ்சிய மழை தொடர்ந்து பொழிந்தது. இதனால் சிம்லா உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது.

சிம்லாவில் கடந்த 14 ஆம் தேதி பெய்த பலத்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவின் போது கோவில் ஒன்று இடிந்து விழுந்ததில் 16 பேரின் உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டது. இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 3 பேரை மீட்புப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல பிரதேசத்துக்கு மத்திய அரசு சார்பில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 200 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.