புதுச்சேரி - சர்க்கரை ஆலை ஆர்ப்பாட்டத்தில் போலீசார் தடியடி 15 பேர் காயம்

புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையை பாதுகாக்க வலியுறுத்தி லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள சர்க்கரை ஆலை வளாகம் அருகே எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசார் தடியடி - எம்.எல்.ஏ சட்டை கிழிப்பு, 15 பேர் காயம்.
2016-17-ல் கரும்பு அறவை பருவத்துக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு 7 மாதங்கள் ஆகியும் முன்பணத்தொகை ரூ.7.5 கோடியை தரவில்லை, அதை உடனே தரவேண்டும். நிகழாண்டு விவசாயிகளிடம் இருந்து பிடித்தம் செய்த கரும்பு கடன் தொகை ரூ.3 கோடியை அரசு உடனே வங்கிகளுக்கு செலுத்த வேண்டும். 2015-16 ஆண்டுக்கு பிடித்தம்செய்த கரும்புக் கடன்தொகை ரூ.3.5 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்து அறிவித்தும் விவசாயிகளுக்கு திருப்பித்தரவில்லை. மேலும் 3 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு தரவேண்டிய ரூ.7 கோடி நிலுவையை வழங்கவேண்டும்.
கூட்டுறவு ஆலையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் கடந்த மார்ச் முதல் செப்டம்பர்வரை 7 மாதங்கள் இபிஎப், எல்ஐசி பணிக்கொடைரூ.27.5 கோடிசெலுத்தப்படவில்லை. பணியாளர்கள் உடனே வழங்கவேண்டும். ஆலை பணியாளர்களுக்கு போனஸ், ஊக்கத்தொகை தர வேண்டும், ஆலையைதனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி கரும்பு விவசாயிகள் சங்கம், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ., டிபிஆர்.செல்வம் தலைமை தாங்கினார்.
அப்போது விவசாயிகள்கரும்புடன் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கோஷமிட்டு ஆலையின் உள்ளே நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்தன். அதையும் மீறிபோராட்டக்காரர்கள் உள்ளே செல்ல முயன்றபோது தடியடி நடத்தினர். இதில் என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ டிபிஆர்.செல்வம் சட்டை கிழிக்கப்பட்டது. ஆலையின்முன்னாள் தலைவர் ஞானசேகரன் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.
பின்னர் எம்எல்ஏ செல்வம் உள்ளிட்ட 100 பேரைபோலீசார் கைது செய்தனர். அவர்களை வாகனத்தில் அழைத்துச் செல்லமுயன்றபோது அங்கிருந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
- சுந்தரபாண்டியன்