பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
குடும்ப பிரச்னையில் பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்டியாவை சேர்ந்தவர் டைசன்பால் (38). பெஸ்காம் ஊழியர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உள்ள தர்மஸ்தலா கிராம வளர்ச்சி துறையில் பணி புரிந்து வருகிறார். இதனால் மாலூர் ராஜீவ்நகரில் வீடு வாடகை எடுத்து வசித்து வந்தார். மண்டியாவில் பணி புரியும் டைசன்பால் அடிக்கடி மாலூருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாலூருக்கு வந்த டைசன்பால் மற்றும் மனைவி இடையே குடும்ப விஷயமாக தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மறுபடியும் மண்டியாவுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை மண்டியாவில் இருந்து மாலூருக்கு வந்த டைசன்பால் வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்றிருந்த மனைவி வீட்டு வந்த போது தற்கொலை சம்பவம் தெரியவந்தது. இதனால் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த மாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.