Skip to main content

பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்த அவகாசம் மறுப்பு - மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

MALLIKARJUNA KARGE

 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று விளக்கமளித்தார். இந்தநிலையில் பிபின் ராவத்துக்கும் விபத்தில் உயிரிழந்த மற்றவர்களுக்கும் அஞ்சலி செலுத்த எதிர்க்கட்சிகள் அவகாசம் கோரியதாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சரின் அறிக்கைக்குப் பிறகு, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பிறருக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு எம்.பி.க்கும் 1 முதல் 2 நிமிடங்கள் அவகாசம் கேட்டோம். ஆனால் எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. இந்த அணுகுமுறையை நாங்கள் கண்டிக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Mallikarjuna Kharge said This is the last chance to save democracy

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.  'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள், மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 7 கட்டங்களாக நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “2024 மக்களவைத் தேர்தல் இந்தியாவிற்கு நியாயத்தின் கதவை திறக்கும். ஜனநாயகத்தையும் நமது அரசியலமைப்பையும் சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம். வெறுப்பு, கொள்ளை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக ‘இந்திய மக்களாகிய நாங்கள்’ ஒன்று சேர்ந்து போராடுவோம்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“பா.ஜ.கவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட வேண்டும்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Mallikarjun kharge said Bank accounts of BJP should be frozen

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத் ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தேதியை நிர்ணயித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திலும் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி வாங்கிய தொகை ஆகியவை விவரங்களாக தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் பென்டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக முதலிடத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,609 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாயும், பிஆர்எஸ் கட்சி 1,214 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன. திமுக 617 கோடி ரூபாயும் பெற்றுள்ளது. தேர்தல் பத்திரம் குறித்த தகவல் வெளியான நிலையில் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் மொத்த வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக எப்படி பணம் சம்பாதித்தது என்பதை இன்று உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வின் அறிவுறுத்தலின் பேரில், காங்கிரஸ் கட்சி கணக்குகளை வருமானத்துறையினர் முடக்கிவிட்டனர்.  எங்களின் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. இதை வைத்து எப்படி தேர்தலுக்கு செல்வது?

எங்கள் கணக்குகள் முடக்கப்படும், ஆனால் அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படாமல் இருக்கும். பாஜகவிற்கு இவ்வளவு பெரிய தொகை, எப்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக கிடைத்தது.  இவர்கள் தொழிலதிபர்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் மிரட்டி இந்த பணத்தை வாங்கினார்களா அல்லது லஞ்சமாக பெறப்பட்டதா போன்றவை குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். அதுவரை பாஜகவின் வங்கி கணக்கு முடக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

அதேபோன்று, கார்கே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மொத்தமாக வசூலிக்கப்பட்ட தேர்தல் பத்திரப் பணத்தில் பாஜகவுக்கு 50% நன்கொடை கிடைத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 11% நிதி மட்டுமே கிடைத்தது. சந்தேகத்திற்குரிய பல நன்கொடையாளர்கள் உள்ளனர். இவர்கள் யார்? இவை எந்த நிறுவனங்கள்? அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ போன்ற ரெய்டுகளுக்குப் பிறகுதான், பல நிறுவனங்கள் நன்கொடை அளித்திருக்கிறது.  அத்தகைய நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்தது யார்? பாஜகவின் இந்த ஊழலை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் உயர்மட்ட விசாரணையை நாங்கள் கோருகிறோம். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஆனால், கோடி, கோடியாக பணம் சம்பாதித்த பாஜக மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விசாரணையுடன் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியின் சட்ட விரோதமான தன்மை காரணமாக பாஜகவின் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும் என்று கோருகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.