hj

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கர்நாடகாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.

Advertisment

இன்று மட்டும் கர்நாடகாவில் 10,517 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 8,337 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 5,69,947 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,00,786 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1,20,929 ஆக உள்ளது. மேலும், இன்று மட்டும் 102 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 9,891 பேர் பலியாகியுள்ளனர்.