ஊடகங்களின் வாயை அடைக்க ஜெ., பாணியில் அமித் ஷா மகன்!

இந்நிலையில், அந்தச் செய்தி தவறானது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மறுத்தார். இந்தச் செய்தியை வெளியிட்ட நிறுவனம் மீது 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஜெய் அவதூறு வழக்குத் தொடர்ந்திருப்பதாக கோயல் தெரிவித்தார்.
செய்தி நிறுவனங்களின் வாயை மூடுவதற்கு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எதற்கெடுத்தாலும் ஊடகங்கள் மீது அவதூறு வழக்குகளும், கிரிமினல் வழக்குகளும் போடுவது வழக்கம். அல்லது, அந்த செய்தி நிறுவனங்களுக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது வழக்கம். இதையே அமித் ஷாவும், பாஜக அரசும் செய்கிறது என்று ஊடக துறையினர் தெரிவித்துள்ளனர்.