/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ege.jpg)
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமானலாலு பிரசாத் யாதவ், காய்ச்சல் காரணமாக டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளன.
மேலும், லாலு பிரசாத் யாதவின் உடல்நிலைசீராக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். அதன்பின்னர் அவர் நேற்று (26.11.2021) டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
முன்னதாக, அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் பெயில் வழங்கியது. இதனைத்தொடர்ந்து அவர், மூன்று வருடங்களுக்குப் பின்னர் கடந்த மாதம் பீகாருக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)