குஜராத் தேர்தலை சந்திக்க பெட்ரோல் மீது 4% வாட் வரி குறைப்பு!

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதமர் மோடி பல்வேறு முடிவுகளை அறிவிக்கிறார். அதன் ஒரு பகுதியாக இவ்வளவு காலம் கழித்து, திடீரென்று பெட்ரோலிய பொருட்கள் மீது 4 சதவீத வாட் வரியை குறைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த வரிக்குறைப்பு மூலம் பெட்ரோல் விலை ரூ.2.93ம் டீசல் விலை ரூ.2.72ம் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக்குறைப்பு வாக்காளர்களிடம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், குறைக்கப்பட்ட இந்த ரூபாய் விரைவில் வேறு வடிவில் உயர்த்தப்பட்டுவிடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.