
கோவா முதல்வர் மனோகர் பரிகர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதித்த பின்னர், கோவாவில் வேறு ஒருவரை பொறுப்பு முதல்வராக பதவி ஏற்பார்கள் என்றும். சிலர் பாஜக ஆட்சியே கலைக்கப்படும் என்றும் பேசப்பட்டது. ஆனால், மனோகர் பரிகரே கோவாவில் தொடர்ந்து முதல்வராக இருப்பார் என்று பாஜக தலைவர் அமித்ஷா முற்றுபுள்ளி வைத்தார்.
இந்நிலையில், மனோகர் பரிகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கோவா மாநில அமைச்சரவை கூட்டத்தில் இருக்கும் முக்கிய தலைவர்கள் மற்றும் கூட்டணி தலைவர்களிடம் கோவாவில் இருக்கும் நிலையை குறித்து கலந்துறையாட உள்ளார். இந்த நிகழ்வில் பாஜகவுடன் இணைந்து செயலாற்றும் மூன்று கூட்டணி கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் மனோகர் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.