
கடந்த 2016 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த 8 வயது சிறுமியை அவரது தாயார் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரது உறவினர் ஒருவர் 8 வயது சிறுமியை கடிதம் எழுத உதவுமாறு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து தாயாரிடம் சிறுமி கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் போலீஸ் புகார் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில் போக்சோ வழக்குப் பதிவு செய்து போலீசர் உறவினரை கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர், “அந்த பெண் தான் என்னை அழைத்தார் என்றும், அந்த பெண்ணின் பெற்றோர் எனக்கு ரூ.55,000 தரவேண்டும். ஆனால் என்மேல் இப்படி ஆதாரம் இல்லாமல் குற்றம் சொன்னால் அந்த பணத்தைக் கேட்க மாட்டேன் என்பதற்காக இப்படி குற்றம் சாட்டுகின்றனர்” என்றார்.
இதற்கு, ஆதாரம் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியுமா என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கேள்வி எழுப்பினார். மேலும், நீதிமன்றத்தில் இது போன்ற வழக்கு தொடராமல் இருப்பதற்கு காரணம் குடும்ப கெளரவம் கெட்டுவிடும் போன்ற பல காரணம் சொல்லி மறைக்கப்படுகிறது என்றும் ஒரு பெண்ணின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்கத்தான் இந்த வழக்கைத் தொடர்ந்தேன் என்றும் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.