Skip to main content

திமுகவின் பாய்ச்சல் வேகமும் கோஷ்டி பூசலும்!

Published on 31/10/2017 | Edited on 31/10/2017


 

திமுகவின் கருப்புக் கொடி போராட்டத்தை சமாளிப்பதில்தோல்வி அடைந்த காமராஜ்  அரசாங்கம், போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் வசித்த பகுதிகளில்எல்லாம் கொடூரமான  போலீஸ் தாக்குதலை நடத்தியது. 

போலீஸ் தாக்குதலில் காயமடைந்த இருவர் உயிரிழந்தனர்.சென்னை நகரம் முழுவதும்  காமராஜ் அரசாங்கத்தின் கொலைவெறி தாக்குதல்கள் குறித்தே மக்கள்பேசினர். 

ஜவஹர்லால் நேரு விமான நிலையத்தை விட்டு வெளியேறியதும்அங்கு கூடியிருந்த கூட்டம்  தன்னைக் காணவே வந்திருப்பதாக நினைத்து கையசைத்தபடி வந்தார்.அப்போது, கூட்டத்தினர்  தாங்கள் மறைத்து வைத்திருந்த கருப்புத் துணியை எடுத்து வீசியதைபார்த்து  அவர் அதிர்ச்சியில் உறைந்தார். 

பிறகு திறந்த காரில் ஊர்வலமாக செல்ல தயாரானபோது காமராஜ்நேருவின் சட்டையை  பிடித்து இழுத்து காருக்குள் அமரும்படி கூறினார். வழக்கமாக மக்கள்கூட்டத்தைப் பார்த்து நேரு  கையசைத்தபடியே செல்வார். அன்றைய பயணம் வேறுவிதமாக முடிந்தது. 

இதில் ஏற்பட்ட விரக்தியால்தான் காவல்துறையை ஏவி பழிதீர்த்தார்காமராஜர். ஆனால், இது  திமுகவின் மிகப்பெரிய வெற்றியாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்றமாநிலங்களிலும்  பேசப்பட்டது. 






எனினும் இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிவில் கைதானதிமுகவினருக்கு 25 ரூபாய்  அபராதமும் கட்டத் தவறினால் 10 நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.அபராதம் கட்ட  மறுத்து சிறைக்குச் சென்றவர்களை இரண்டு நாட்களில் விடுதலை செய்தனர். பின்னர்,  அபராதத் தொகையை வசூலிப்பதாக கூறி அவர்களின் வீடுகளில் உள்ள பொருட்களை ஜப்தி  செய்துஅவமானப்படுத்தினர். 

இந்நிலையில்தான் தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும்மாநகராட்சிகளுக்கு தேர்தல்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நீதிக்கட்சிக் காலத்தில்இருந்து உள்ளாட்சி மன்றங்களில்  கட்சி அரசியலைக் கொண்டு செல்லக்கூடாது என்ற கருத்துகடைப்படிக்கப்பட்டது. 

ஆனால், காங்கிரஸ் கட்சி எப்போது சட்டமன்றத்தைக் கைப்பற்றியதோ,அப்போதிருந்து  உள்ளாட்சி மன்றங்களிலும் கட்சி அரசியலைப் புகுத்தத் தொடங்கியது. 

நீதிக்கட்சியின் கருத்தையே திமுகவும் வலியுறுத்திவந்தது. ஆனாலும், காமராஜ் அரசாங்கம்  உள்ளாட்சிகளில் கட்சி அரசியலைப் புகுத்துவதில்உறுதியாக இருந்தது. தனது கட்சியினரின் அதிகார ஆசைகளை தீர்ப்பதற்கு உள்ளாட்சி மன்றங்களைவாய்ப்பாக பயன்படுத்த  நினைத்தது. 

எனவே, திமுகவுக்கும் வேறு வழியில்லாமல் போயிற்று.உள்ளாட்சிகளில் திமுகவும்  போட்டியிடுவது என்று முடிவெடுத்தது. சென்னை மாநகராட்சி தேர்தல்பொறுப்பு கலைஞரிடம்  ஒப்படைக்கப்பட்டது. அவருடைய தலைமையில் 11 பேர் கொண்ட குழு வேட்பாளர்தேர்வு  பிரச்சாரம் ஆகியவற்றை கவனித்தது. 

தேர்தல் முடிவில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி மன்றங்களிலும்திமுகவினர் இடம்பெறும்  வாய்ப்பைப் பெற்றனர். சென்னை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில்90 வார்டுகளில்  போட்டியிட்ட திமுக 45 இடங்களில் வெற்றிபெற்றது. கோயம்புத்தூரில் முக்கியஎதிர்க்கட்சியாக  கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களை பெற்றது. 

இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியுடன் உடன்பாடு எட்டப்படுவதற்குபொதுச்செயலாளர்  நெடுஞ்செழியனும், கலைஞரும் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றிபெற்றனர்.சென்னை  மாநகராட்சியில் திமுக சார்பில் மேயர் பொறுப்புக்கு நிறுத்தப்பட்ட அ.போ.அரசுவெற்றிபெற்று  சென்னை மாநகராட்சியின் முதல் திமுக மேயராக பொறுப்பேற்றார். 

சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியவுடன் கலைஞரின்செல்வாக்கு கட்சியினர்  மத்தியில் உயரத் தொடங்கியது. திமுகவில் கோஷ்டி மனப்பான்மை உருவாகத்தொடங்கியது. 

மாயவரத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில் சட்டமன்றம்,நாடாளுமன்ற உறுப்பினர்களாக  இருப்பவர்கள் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட முடியாதுஎன்ற திருத்தத்தை  இணைக்க ஈ.வே.கி.சம்பத் முன்மொழிந்தார். 

இது கட்சிக்குள் அதிருப்தியையும் பகைமையையும் உருவாக்கவழியமைத்துவிடும் என்று  அண்ணா சொன்னார். அத்துடன், சம்பத் முன்மொழிந்த திருத்தத்துடன்,மாநாகராட்சி  உறுப்பினர்களாக இருப்பவர்களையும் கட்சிப் பொறுப்புகளுக்கு போட்டியிட முடியாதுஎன்ற  திருத்தத்தையும் இணைக்கும்படி வேண்டிக் கொண்டார். 

அதைத்தொடர்ந்து, அந்தத் தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில்தான்  திமுகவின் மூன்றாவது மாநாடுக்கு கட்சியினர் தயாராகினர். மாநிலம் முழுவதும்அமைப்புத்  தேர்தல் நடைபெற்றது. அப்போதே கலைஞர்தான் அடுத்த பொதுச்செயலாளராக வர வேண்டும்  என்றும், மதியழகன் வந்தால் நல்லது என்றும் தொண்டர்கள் மத்தியில் கருத்து பரவத்  தொடங்கியது. 

இதற்கு மாற்றாக, சம்பத் ஒரு கருத்தை உருவாக்க முயன்றார்.அதற்காகத்தான் மாயவரம்  பொதுக்குழுவில் அடித்தளம் அமைத்தார். அவருக்கு கட்சியில் சினிமாநடிகர்கள் முக்கியத்துவம்  பெறுவதை ஏற்க முடியவி்ல்லை. அவர்கள் எடுத்தவுடனே மேல்மட்டத்திலிருந்து  செயல்படத் தொடங்கி விடுகிறார்கள் என்று கூறிவந்தார். அதுமட்டுமின்றி பொதுக்கூட்டங்களில்  அவர்கள் வரும்போது ஏற்படும் ஆரவாரம், இடையூறு ஆகியவற்றையும் அவர் குறைகூறினார். 

இத்தகைய கோஷ்டி மனப்பான்மையில் மூன்றாவது மாநாடு கூடியது.திமுகவின் திருத்தப்பட்ட  சட்டத்தின்படி, மதியழகன் பொதுச்செயலாளராக வாய்ப்பு இருந்தது.ஆனால், நாள் நெருங்க  நெருங்க கழகத்தின் நீண்ட நாள் தோழரான சி.பி.சிற்றரசுவுக்கும்,கடமை வீரரான  என்.வி.நடராசனுக்கும் பொதுச்செயலாளர் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம்  வளர்ந்தது. அவர்களை பலரும் ஊக்குவிக்கத் தொடங்கினர். தேர்தலுக்கு முன் இரவுவரை  இழுபறிநீடித்தது. மதியழகனும் சிற்றரசுவும் போட்டியிடுவதென்ற சூழ்நிலை உண்டாகிவிட்டது. 

பொதுச்செயலாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்என்று எவ்வளவோ முயன்றும்  முடியாமல் போனது. கடுமையான நெருக்கடியைப் போக்க, கோஷ்டி மனப்பான்மைக்கு  முற்றுப்புள்ளி வைக்க அறிஞர் அண்ணா அவர்களே பொதுச் செயலாளராக இருக்க வேண்டும்  என்றமுடிவுக்கு முன்னணித் தலைவர்கள் வந்தனர். 

அந்த அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. புதிய சட்டதிட்டத்தின்படிஈ.வே.கி.சம்பத்  அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய தலைமாயில் பொதுக்குழுகூடியது.  அறிஞர் அண்ணா அவர்கள் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதையடுத்து, மாயவரம் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர்பதவி குறி்த்து ஈ.வே.கி.சம்பத்  கொண்டுவந்து சேர்க்கப்பட்ட திருத்தத்தை நீக்க வேண்டும்என்று கே.ஏ.மதியழகன்  கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது. பின்னர் கலைஞர் கருணாநிதி கட்சியின்  பொருளாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, தலைமைக்கழகச்  செயலாளராககே.ஏ.மதியழகனும், அமைப்புச் செயலாளராக என்.வி.நடராசனும்  பிரச்சாரக்குழுச் செயலாளராகநெடுஞ்செழியனும் தொழிற்சங்கச் செயலாளராக  க.அன்பழகனுமாக முக்கியப் பொறுப்புகளுக்கு முன்னணிதலைவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். 




தேர்தல் சுமுகமாக முடிந்தாலும், அண்ணா அவர்களால் 12 ஆண்டுகள் வளர்க்கப்பட்ட  குடும்பப்பாசம் சீர்குலைந்தது. கட்டுப்பாடும், ஒற்றுமையும்சீர்குலைந்தது. சம்பத் கோஷ்டி  என்றும் கருணாநிதி கோஷ்டி என்றும் மக்கள் மத்தியிலும்தொண்டர்கள் மத்தியிலும் பேச்சு  நிலவும் சூழல் உருவாகியது. 

ஒருவர் செயலை மற்றவர் குறைகாணும் போக்கு அதிகரித்தது.அமைதியே உருவான  அண்ணாவுக்கு இது வேதனை அளித்தது. நல்லதோர் சூழலை உருவாக்க அவர் முயற்சித்தார்.  ஆனால் கோஷ்டி மனப்பான்மை அதிகரிக்கவே செய்தது. 

கட்சிக்குள் மிதவாதத் தன்மை அதிகரித்துவிட்டதாகவும்,கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள்  கலைத்துறையில் ஈடுபடக்கூடாது என்றும் முழுநேரக் கட்சிப்பணியில்கவனம் செலுத்த  வேண்டும் என்றும் ஈ.வே.கி.சம்பத் கூறிவந்தார். இது கோஷ்டிப் பூசலை அதிகரிக்கவேசெய்தது. 

குறிப்பாக நடிகர்களும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களும்பொதுக்கூட்ட மேடைக்கு  வரும்போது மக்கள் மத்தியில் ஆரவாரம் ஏற்படுவதை சம்பத் பெரிய குறையாககூறி தனது  வாதத்தை தோழர்கள் ஒப்புக்கொள்ளும்படி செய்ய முயன்றார். 

இந்நிலையில்தான் ‘திராவிடநாடு’ இதழில் ‘எல்லோரும்இந்நாட்டு மன்னர்’ என்ற தொடர்  கட்டுரையை ஐந்து வாரங்கள் எழுதினார். இந்தக் கட்டுரை அறிஞர் பெர்னாட் ஷா எழுதிய  ‘ஆபிள்கார்ட்’ என்ற ஆங்கில நாடகத்தை தழுவி எழுதப்பட்டது. 




இந்தக் கட்டுரையை வாசித்த சம்பத் அண்ணா தன்னை தாக்குவற்காகவேஇந்தக் கட்டுரையை  எழுதியதாக கருதிக்கொண்டு, கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ பத்திரிகையில்‘அண்ணாவின்  மன்னன்’ என்ற கட்டுரையை எழுதி வெளியிட்டார். 

சம்பத்தின் இந்த நடவடிக்கை கழகத் தோழர்கள் மத்தியில் ருவறுப்பை ஏற்படுத்தியது.  கலைஞர் கருணாநிதி மீது சம்பத் மற்றும் அவருடைய நண்பர்களுக்குஏற்பட்ட  பொறாமையுணர்ச்சி அண்ணாவின் மீது திருப்பப்பட்டது. அண்ணாவின் பெருமைகளை  குறைத்து சிறுமைப்படுத்த முயன்றனர். 

தனது விருப்பப்படியெல்லாம் கட்சியில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற குறுகிய  மனப்பான்மை சம்பத்துக்குள் வளர்ந்தது. ஜனநாயக இயக்கத்தில் பலதரப்பட்டவர்களும்  இருப்பார்கள். எல்லோரையும் அனுசரித்து அவரவரின் பங்களிப்பை இயக்கத்தின் வளர்ச்சிக்கு  பயன்படுத்த வேண்டும். அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற பரந்த  சிந்தனை சம்பத்திடம்இல்லாமல் போனது. சம்பத் ஏதோ ஒரு முடிவுடன் கோஷ்டிப் பூசலை  வளர்த்து வந்தார் என்பது1961 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற  பொதுக்குழுவில் வெளிப்பட்டது. 

(திமுகவில் ஏற்பட்ட முதல் பிளவும் ஈ.வே.கி.சம்பத்தின் புதிய கட்சியின் நிலையும் பற்றி வியாழக்கிழமை பார்க்கலாம்)

 

-ஆதனூர் சோழன்


முந்தைய பகுதிகள் :

23. காமராஜர் வீணாக்கிய சட்டமன்றக் கட்டிடம்!


22. தேர்தலில் போட்டியிட திமுக முடிவு செய்தது ஏன்?

 

சார்ந்த செய்திகள்