Skip to main content

வடகொரிய அதிபரை விரும்பும் மக்கள் !

Published on 08/10/2017 | Edited on 08/10/2017
வடகொரிய அதிபரை விரும்பும் மக்கள் !





இந்திய மக்கள் தீபாவளிக்கு தயார் ஆகுவதை போல அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களில்  'ஹாலோவீன்' எனும்  திருவிழாவிற்கு   தயார் ஆகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்  31 ஆம்  தேதி இரவு கொண்டாடப்படும் இந்தத்  திருவிழாவில், பேய்களைப்  போன்று  குழந்தைகளை அலங்கரிப்பர்.  சில பிரபலங்களின் முகங்களைக்கொண்டு  பூதம் போல வடிவமைக்கப்பட்ட முகமூடிகளை மக்கள் அணிந்து கொண்டாடுவதும் வழக்கம். இந்த வருடத்தின் விற்பனை தற்போதே ஆன்லைனிலும் கடைகளிலும்  ஆரம்பித்து விட்டது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வடிவில் உள்ள முகமூடி  இந்த வருட ஹாலோவீன் விற்பனையில் முன்னணியில் இருக்கிறதாம்.  நல்ல வரவேற்பை கொண்டுள்ள முகமூடியாக கிம்மின் முகம் இருக்கின்றது.





கிம் தற்போதைய உலகின் பல நாடுகளுக்கும்  அச்சுறுத்தலான அதிபர்,சர்வாதிகாரியும் கூட. ஐ.நா சபை  தடுத்தும், தொடர்ந்து    அணு ஆயுத சோதனையை  செய்து உலகெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.  அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ட்விட்டர் மூலம்  மோதி வருகிறார். அதிபர் டிரம்பும் இவரும்  மோதிக்  கொள்வதைப்  பார்த்தால் மூன்றாம் உலகப்  போர் இவ்விரண்டு நாடுகளின் மூலமாகத்  தான் ஆரம்பம் ஆகும் என்று பலரும் அஞ்சுகின்றனர். கடந்த ஆண்டு ஹாலோவீனில் முன்னணியில் இருந்த டிரம்ப் முகமூடி, இந்த ஆண்டு சற்று பின்தங்கியுள்ளது.  







இதைத் தவிர சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஹாலிவுட் திகில் படமான 'இட்'  (IT) பட முகமூடியும், மற்றுமொரு வெற்றிப்படமான 'வண்டர் வுமன்' (Wonder Woman) பட முகமூடியும் அதிகமாக விரும்பி  வாங்கப்படுகின்றன.   

ஹாலோவீன் திருவிழா, மேற்குலக பழங்கதைகளின் படி, அறுவடைக்குத்  தயாராக இருக்கும் பயிர்களை அழிக்க வரும் பேய்களை விரட்ட மக்களும் பேய்களைப் போன்று வேடமணிந்திருந்ததாகக் கூறப்பட்டு, அந்த வழியில் கொண்டாடப்படுவதாகும். பேய்களின் உருவமாக கிம், டிரம்ப் போன்ற ஆட்சியாளர்களின் உருவங்கள் பயன்படுத்தப்படுவது பொருத்தம் தானோ?     

சந்தோஷ் 

சார்ந்த செய்திகள்