
காஞ்சிபுரத்தில் பட்டு நெசவு தொழில் செய்துவரும் வயதான தம்பதிகள் அரக்கோணம் அருகே கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் புஞ்சை அரசுதாங்கல் பகுதியைச் சேர்ந்த பட்டுநெசவுத் தொழிலாளி மாணிக்கம். இவரது மனைவி ராணி கட்டுமான கூலித்தொழில் செய்து வந்தார். மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை திரும்ப தரமுடியாமல் தம்பதிகள் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிக்கத்தையும் அவரது மனைவி ராணியையும் கடன் கொடுத்த சிலர் காரில் ஏற்றி சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அரக்கோணம் அருகே மின்னல் பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே முட்புதரில் தம்பதிகள் இருவரின் உடல்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் தம்பதிகளின் உடல்களை மீட்ட போலீசார் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களது உடலில் பலத்த காயங்கள் இருந்தது. இதுகொலைதான் என உறுதி செய்துள்ள போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.
இதேபோல்அண்மையில் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்- அனுராதா என்ற வயதான தம்பதி அமெரிக்காவில் படித்து வரும் தமது பிள்ளைகளைச் சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய நிலையில் பணத்திற்காக ஓட்டுனரால் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)