ஆசிய ஹாக்கி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா
Published on 14/10/2017 | Edited on 14/10/2017
ஆசிய ஹாக்கி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 10-வது சீசன் வங்க தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, ஜப்பான், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தநிலையில், தாக்காவில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 5-க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் மேலும் 2 கோல்களை அடித்தனர். இதன் மூலம் 7-க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி வாகை சூடியது.