mr vijayabaskar

கரூர் அடுத்த தளவாபாளையத்தில் அமமுக-வில் இருந்து விலகியவர்கள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அப்போது விஜயபாஸ்கர் பேசுகையில், இப்போ கலைந்து விடும், அப்போ கலைந்து விடும், அதிமுக ஆட்சி ஒரு அமாவாசைக்கு தாங்காது என்று எத்தனையோ பேர் சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி இந்த ஆட்சி தொடருகிறது.

ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை. பிறகு ஏன் அவர் சொத்து சேர்க்க வேண்டும். மன்னார்குடி கும்பல் ஜெயலலிதா வீட்டில் முகாமிட்டு சொத்துக்களை வாங்கி குவித்தது. அவர்கள் செய்த இந்த காரியத்தால்தான் ஜெயலலிதா சிறைக்கு போகும்நிலை ஏற்பட்டது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

ஜெயலலிதா இறந்துவிட்டார். அவரது பூத உடல் எடுத்துச் செல்லப்படவில்லை. இந்த நிலையில் மும்பையில் இருந்து விமானத்தில் பிரபல மேக்கப் கலைஞர்களை வரவழைத்து ஜெயலலிதா போல கொண்டை போட செய்து, ஜெயலலிதா போல க்ளோஸ் நெக் ஜாக்கெட் தைத்து போட்டுக்கொண்டு ஆட்சியை பிடிக்க நினைத்தார்கள். அவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

ஜெயலலிதா இறந்துவிட்டாலும் அவருக்கு துரோகம் செய்தவர்களை, ஜெயலலிதா ஆன்மா பிடித்து பெங்களூரு சிறையில் தள்ளியது. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களை அவரது ஆன்மா மன்னிக்காது. இவ்வாறு பேசினார்.