காணாமல் போன ஸ்வீடன் பத்திரிகையாளரின் தலை, கால்கள் மீட்பு!
காணாமல் போன ஸ்வீடன் பத்திரிகையாளரின் உடல் உறுப்புகள் அடுத்தடுத்து கிடைத்து வரும் நிலையில், தற்போது அவரது தலை மற்றும் கால்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்வீடன் நாட்டின் பத்திரிகையாளர் கிம் வால், பீட்டர் மேட்சன் என்பவர் உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்றார். அதன்பிறகு அவர் தரப்பில் இருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன. ஆனால், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதியில் இருந்து அவரது தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் சந்தேகம் ஏற்பட்டு, பீட்டர் மேட்சன் கைது செய்யப்பட்டார்.
11 நாட்களுக்கு முன்னர் அவரது உடல்பகுதி மட்டும் கிடைத்திருந்த நிலையில், கோபன்ஹேஜனின் கோபே கடற்கரைப் பகுதியில் அவரது தலை மற்றும் கால்பகுதிகள் ஒரு கனமான உலோகப்பையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள பீட்டர் மேட்சன், கிம் வாலை தான் கொலை செய்யவில்லை என்றும், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த கனமான கதவு தாக்கியதில்தான் அவர் உயிரிழந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.