Skip to main content

பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்க சீனா முடிவு

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்க சீனா முடிவு

உலகின் மிகப்பெரும் ஆட்டோமொபைல் சந்தையாக விளங்கும் சீனா, தனது நாட்டில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்க முடிவுக்குவந்துள்ளது. மின்னணு கார்களை ஊக்குவிக்கவும் காற்று மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியாகவும் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆட்டோமொபைல் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர் ஜின் கவுபின், இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், இதை அமல்படுத்துவதற்கு எவ்வளவு காலம் நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

சார்ந்த செய்திகள்