உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில்,தற்போது நோய்த் தொற்று சீராக குறைந்துவருகிறது.. இதுவரை 19 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்தாக்கியுள்ளது. 41 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் 19.53 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16.63 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41.82 லட்சமாக இருக்கிறது. கரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.14 கோடியைக் கடந்துள்ளது. மேலும் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.