இந்தியாவின் அமெரிக்க தூதராக கென்னத் என்பவரை முன்மொழிந்த ட்ரம்ப்!

இந்தியாவின் அமெரிக்க தூதர் பதவி, டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி 45ஆவது அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே காலியாக இருந்தது. கென்னத் ட்ரம்பின் சர்வதேச பொருளாதாரத்துறை உதவியாளாராகவும், அமெரிக்க பொருளாதார இயக்கத்தின் துணை இயக்குனராகவும் செயல்பட்டவர்.
புஷ் ஆட்சியில் இருந்தபோது 2001 - 2005 காலகட்டத்தில் வர்த்தகத்துறை செயலாளராக செயலாற்றியவர். சட்டம், தொழில், நிதி மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறையில் 35 ஆண்டுகள் செயலாற்றியவர்.