Skip to main content

இளைஞர் மர்ம மரண வழக்கு: மாரியப்பனை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உத்தரவு

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
இளைஞர் மர்ம மரண வழக்கு: மாரியப்பனை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சேலம் இளைஞர் சதீஸ்குமார் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் மாரியப்பன் தங்கவேலுவை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது.

2016 ஆமா ஆண்டு ஜூன் மாதம் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவின் கார் மீது பெரியவடக்கம்பட்டியை சேர்ந்த சதீஸ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தால் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதற்கு மாரியப்பன் அவர் நண்பர்களுடன், சதீஸ்குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு பின்னர் மாயமான சதீஸ் குமார், ரயில்வே தண்டாவளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் குடும்பத்திற்கு மாரியப்பன் தரப்பிலிருந்து மிரட்டல் வருவதாகவும், அதனால் தங்களுக்கு போலிஸ் காவல் வழங்க உத்தரவிட வேண்டும் என சதிஸ் குமாரின் தாயார் முனியம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மாரியப்பன் தங்கவேலுவை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்பிற்கு அறிவுறுத்திய நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்