Skip to main content

விழுப்புரத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு காசாயம் தர மறுப்பது ஏன்!

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
விழுப்புரத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு காசாயம் தர மறுப்பது ஏன்! 

தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பாதிக்கபட்டு உயிர் பலி ஏற்படுகிறது. குறிப்பாக விழுப்புரம் பகுதியில் அடிக்கடி டெங்கு காய்ச்சல் அதிகரித்துகொண்டு வருகிறது. ஆனால் அரசு சார்பில் எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை. ஏன் நிலவேம்பு காசயம் தர கூட மாவட்ட நிர்வாகத்தில் நிதி இல்லையா என்று பொதுமக்கள் கேள்வி. விழுப்புரம் பகுதியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம்., ரெயில்வே நிலையத்தில் தினசரி காலை 7 மணி முதல் 11மணிவரை நிலவேம்பு காசயம் கொடுத்தால் இந்த டெங்குவை ஒழிக்க இது ஒரு வழி. ஏன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. அரசு மருத்துவமனையில் கூட நிலவேம்பு தரவில்லை. கேட்டால் காலியாக விட்டதாம். 

இது சுகாதாரம் துறை பதில். முன்பு டெங்கு குறித்து மாவட்ட நிர்வாகம் சார்ப்பில் விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பபடும் தற்போது ஏன் ஒளிபரப்பவில்லை. மாவட்ட ஆட்சியர் கூட்டம் கூட்டி ஆய்வு கூட்டம் நடத்தினாலும் ஒவ்வொரு அதிகாரிகளும் நேர்மையாக பணியாற்றினால் மட்டுமே  டெங்குவை ஒழிக்கமுடியும். சுகாதார துறை தனது பணியை தற்போது தான் தொடங்கி உள்ளது. இத்தனை மாதங்களாக ஒய்வு எடுத்து கொண்டு இருந்து. அதனால் இந்த டெங்கு காய்ச்சல். எனவே அதிகாரிகள் அதிகமாக பணியாற்றி அதிகமாக பரவும்  வரும் டெங்குவை ஓழிக்க. முன் வரவேண்டும். காவல்துறை சார்பில் அனைத்து பள்ளிகளில் நிலவேம்பு காசயம் தந்தால் சிறப்பு முன்பு இருந்த இந்த பணி தொடர. எஸ்.பி அவர்கள் உத்தரவு விட வேண்டும்.

-எஸ். பி. சேகர்

சார்ந்த செய்திகள்