இனி ரயிலில் பயணம் செய்யவே மாட்டோம்! கெஞ்சி, கதறிய மாணவர்கள்..!
ரயிலில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சென்றதாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் தங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என காவல்துறையினரிடம் கெஞ்சி, கதறிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருநின்றவூரில் இருந்து சென்னை சென்டரல் சென்ற ரயிலில் மாணவர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பயணம் செய்தனர். சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய இந்த வீடியோ காட்சிகள் காண்போரை பதட்டமடைய செய்தது.
இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் இன்று 4 மாணவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் காவல் துறையினரிடம், தங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்றும் இந்த ஒரு முறை மன்னித்து விடும் படியும், இனி ரயிலிலே பயணம் செய்ய மாட்டோம் என கெஞ்சி, கதறி அழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.