தீபாவளிக் கூட்டத்தை தினறடிக்கும்
மணல் லாரிகள் : போதையில் தாறுமாறான வேகம்
மணல் ஏற்ற அதிவேகமாக வந்த லாரி பின்கம்பத்தில் மோதி வயலில் கவிழ்ந்த சம்பவம் அக்கம் பக்கத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. லாரியை ஓட்டி வந்த டிரைவரும் குடிபோதையில் இருந்ததாக காவல்துறையினர் கூறினர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்காவிற்கு உட்பட்ட கடக்கம், சித்தமல்லி ஆகிய இடங்களில் கொள்ளிடத்தில் அரசு மணல் குவாரிகள் இயங்கி வருகிறது. குவாரிக்கு மணல் ஏற்றி செல்ல பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகள் வரிசை வரிசையாக வந்து செல்கின்றன. இங்கிருந்து ஏற்றி செல்லும் மணல் சென்னை வரை செல்கிறது.
தினசரி 2000 லாரிகளுக்கு மேல் வந்து மணல் ஏற்றி செல்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகள் கூட்டம் நெரிசலால் சிக்கி தவிக்கிக்கிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்து மணல் ஏற்றுவதற்கு வருசையாக அதிவேகமாக வந்த லாரிகள் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் குருக்கு ரோட்டருகே வந்துக் கொண்டிருந்தன. அதில் ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதி வயலில் சாய்ந்தது. அருகில் இருந்தவர்களும் எதிரே வந்தவர்களும், தாரு மாறாக வந்த லாரியை கண்டு தலை தெறிக்க ஓடியிருக்கின்றனர். லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் புல் போதையில் இருந்த தாக காவல்துறையினரே கூறினர்.
திருவிழா நாட்களிலாவது மணல் குவாரியை மூடியிருக்கணும். அல்லது மாற்றுப்பாதைகளில் அனுப்பியிருக்கணும், இரண்டையும் செய்யாமல் வழக்கம் போல் கடைத் தெரு வழியாகவே செல்கின்றன. லாரி டிரைவர்கள் வெகுதூரம் சென்று வருவதால் தூக்கம், மற்றும் போதையோடு வருகின்றனர். அதோடு, வரிசையாக வருவதால் நெரிசலும் ஏற்படுகிறது. மக்களின் நலனை விட மணல் கொள்ளை நடத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர் அதிகாரிகள்அரசாங்கம், என்கிறார்கள் பொது மக்கள்.
- க.செல்வகுமார்