தமிழ்நாடு மின்ஊழியர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வெள்ளியன்று (அக்.13) சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
-அசோக்குமார்