Skip to main content

கடலில் குளித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மாயம்!

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
கடலில் குளித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மாயம்!

புதுச்சேரி அடுத்த திருபுவனை சார்ந்த +1 பயிலும் மாணவர்கள் வசந்தகுமார், ரவிசங்கர் ஆகிய இருவர் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு விடுமுறையை கழிக்க வந்தனர். அவர்கள் பார்க், கடற்கரை ஆகியவற்றை சுற்றிப்பார்த்து விட்டு, தலைமை செயலகம் முன்பு புதிதாக அமைக்கப்பட்டு வரும் செயற்கை மணல் பரப்பு பகுதியில் உள்ள கடலில் குளித்தனர். அங்கு கடலில் குளிப்பதற்காக தடை விதிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கைக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஓரம் அமர்ந்திருந்த சகோதரி அவர்களை காணவில்லை என கூக்குரலிட்டபோதுதான் அங்கிருந்த பொதுமக்கள் இதனை கவனித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியக்கடை காவல்துறையினரின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திருபுவனையில் இருந்து மாயமான மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர் அங்கு வந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அங்கு வந்த காவல் கண்காணிப்பாளர் வேங்கடசாமி மாயமான மாணவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டனர். மாணவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படை, மீனவர்கள் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து இரண்டாவது நாட்களாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்