ss

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனம் சார்பாக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேசமயம் இந்த மின் இணைப்பு ஆலை பராமரிப்பு பணிக்காகவும், நிர்வாக பணிக்காகவும் மட்டுமே என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்போது காவல்துறையினருடன் தூத்துக்குடி ஆட்சியரும் உடன் செல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment