மதுரை உசிலம்பட்டி அருகே கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சாலையை கடக்க முயன்றனர். அப்போது சாலையில் வந்த கார் எதிர்பாராத விதமாக அனைவர் மீதும் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மற்ற மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.