இன்று தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூடுகிறது
தமிழக காங்கிரஸ் பொதுக் குழு கூட்டம் இன்று (6-ந்தேதி) நடக்கிறது.
இன்று காலை 11 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜ் அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்குகிறார்.

இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தியை நியமிக்க வலியுறுத்துவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. குஷ்புவுக்கு கட்சியில் பதவி வழங்கப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் குஷ்புவுக்கு பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.