Skip to main content

கடல்பாசி மியூசியம்! சாதனை மீனவன்..!!

Published on 28/09/2018 | Edited on 28/09/2018

 

 

kd


    பெரும்பாலும் ரம்ஜான் காலங்களில் மட்டும் உணவுப்பொருளாக அமைந்த கடல்பாசி, தற்பொழுது  சமையலறையில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக மாறியுள்ளது. இந்த கடல்பாசிக்கென தனியாக அருங்காட்சியத்தை அமைத்து சாதனைப் படைத்திருக்கிறார் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த மீனவர் ஒருவர்.

 

k

 

  மண்டபம் மீனவர் காலனியை சார்ந்த மீனவர் ராஜேந்திர பிரசாத் தன் சொந்த முயற்சியில், தன் அன்றாட வருமானத்துக்கு உழைத்தது போக மீதமுள்ள நேரங்களில் பல ஆண்டுகள் உழைத்து தோணித்துறைப் பகுதியில் அழிந்துவரும் கடல்பாசிகளை காக்க கடல்பாசிக்கென ஒரு அருங்காட்சியத்தை உருவாக்கி, கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 300 வகை பாசிகளில் 160 வகை பாசி வகைகளை பாசிகளை பதப்படுத்தியும், அட்டவணை படுத்தியும், உயிருடன் வளர்த்தும் பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது. இவருடைய வழிக்காட்டுதலில் 485 எம்.எஸ்.சி., எம்.பில் மாணவர்களுக்கும், 70  முனைவர் பட்ட மாணக்கர்கள் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்க ஒன்று. இவரது அரும்பெரும் முயற்சியினை மாவட்ட ஆட்சியரிடம் கொண்ட் சேர்ப்பித்த அப்பகுதி மீனவ மக்கள், இவரது அருங்காட்சியத்திற்கு மீன்வளத்துறை மற்றும் CMFRI அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். செவி சாய்க்குமா மீன்வளத்துறை..?
 

 

சார்ந்த செய்திகள்