Folk singer Kollangudi Karupai passes away

Advertisment

நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி (99) வயது மூப்பு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் மதுரை தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். பின்னர் வந்த பிற இசைக் கலைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

அனைத்திந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராகத் தன் பணியைத் தொடங்கிய இவர், அங்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் 1993இல் கலைமாமணி விருது பெற்றார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கொல்லங்குடி கருப்பாயி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரதுவீட்டில் வைக்கப்பட்டுள்ளது.