Published on 15/07/2022 | Edited on 15/07/2022

கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் நீர்வரத்து என்பது அதிகரித்திருந்தது. கர்நாடகாவின் கபினி, கே.எஸ்.ஆர் அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 70,000 கனஅடியில் இருந்து 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர் வரத்தால் சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக அதிகரித்துள்ளது. தற்பொழுது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 74,588 கன அடியிலிருந்து 78,871 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.