Skip to main content

மாற்றுத்திறனாளி வீட்டில் கொல்லப்பட்ட 40 வயது நபர்; சிக்கித் தவிக்கும் போலீஸ்!

Published on 17/05/2025 | Edited on 17/05/2025
40-year-old man  passed away mysteriously at relative's house in kerala

உறவினர் வீட்டில் மர்மமான முறையில் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் 40 வயது நபர். இவர் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தலையில் பலத்த காயங்கள் உட்பட பல காயங்களைக் கொண்ட அவரின் உடலை கண்ட, உள்ளூர்வாசி ஒருவர் உடனடியாக காவல்துறைக்கும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்து சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் ஒரு கொலை வழக்காக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், கொலை தொடர்பான பாரதீய நியாய சன்ஹிதாவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இறந்த நபரின் 55 வயதுடைய ஆண் உறவினர், உடல் ரீதியாக மாற்றுத்திறனாளி ஆவார். ஒரு காலை இழந்து செயற்கை கால் உதவியுடன் நகரக்கூடியவர் என்பதால் அவர் கொலை செய்திருப்பாரா? என்ற கேள்வி போலீஸுக்கு எழுந்திருக்கிறது. இருப்பினும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்