Skip to main content

சிறப்பாக ஆட்சி நடத்துகிறோம்: அமைச்சர் செல்லூர் ராஜு

Published on 30/09/2017 | Edited on 30/09/2017
சிறப்பாக ஆட்சி நடத்துகிறோம்: அமைச்சர் செல்லூர் ராஜு

திமுக ஆட்சியைக்காட்டிலும், அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்றும் எங்களை பொருத்தவரை சிறப்பாக ஆட்சி நடத்துகிறோம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கரூரில் செயல்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை வியாழக்கிழமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அம்மா மருந்தகங்களில் 15 சதவீதம் தள்ளுபடியில் மருந்துகள் விற்கப்படுவதால் போலி மருந்துகள் விற்பனை தடுக்கப்பட்டு, தனியார் மருந்துக் கடைகளும் குறைந்த விலைக்கு மருந்துகளை விற்க வேண்டிய நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதைபோல் அம்மா உணவகங்கள் மூலம் பசியில்லா தமிழகத்தை ஜெயலலிதா உருவாக்கினார். இதுதான் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டு.

திமுக ஆட்சியைக்காட்டிலும், அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. திமுக ஆட்சியில் சுய நலமே மேலோங்கியிருந்தது. ஸ்டாலின் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறி வருவது சுயவிளம்பரத்துக்காக தான். எங்களை பொருத்தவரை சிறப்பாக ஆட்சி நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்