பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரைப்பாண்டியன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
நெஞ்சுவலி காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துரைப்பாண்டியன் உயிர் பிரிந்தது.
அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த துரைப்பாண்டியன் குற்றவியல்வழக்குகளில் ஆஜராகி வந்தார். மேலும் மௌனம் பேசியதே, ரன், ஜெமினி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.