Skip to main content

கீரமங்கலம் அருகே காய்ச்சல் பலிகள் தொடர்வதால் பொதுமக்கள் அச்சம்

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
கீரமங்கலம் அருகே காய்ச்சலுக்கு பெண் பலி 
காய்ச்சல் பலிகள் தொடர்வதால் பொதுமக்கள் அச்சம்

செரியலூர் இனாம் கிராமத்தில் மர்ம காய்ச்சலுக்கு மாரியாயி என்ற பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி :

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி மாரியாயி (62) விவசாய கூலி தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிங்குடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்த போது திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அறந்தாங்கியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவத்தால் உறவினர்கள் கதறி அழுதனர்.

தொடரும் இறப்புகள் :

இதே போல கடந்த ஒரு வாரத்திற்குள் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த 4 வயது காயத்திரி, செரியலூர் இனாம் ஊராட்சி காசிம்புதுப்பேட்டை ராதிகா (13) ஆகிய சிறுமிகள் காய்ச்சலுக்கு பலியானதை தொடர்ந்து அடுத்து மாரியாயி பலியானதான கீரமங்கலம் பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் சிறப்பு மருத்துவமுகாம்கள் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்