Skip to main content

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு

Published on 20/09/2017 | Edited on 20/09/2017
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு

தரமணி சட்டக் கல்லூரி மாணவர்களிடையே முன் விரோதத்தால் மோதல் ஏற்பட்டது. இதில் கல்வீசித் தாக்கியதில் பேராசிரியர் ஒருவர் காயமடைந்தார். சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இந்நிலையில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நேற்று மதியம் கேண்டீனில் இரு தரப்பாக அமர்ந்திருந்தனர். ஏற்கெனவே இருதரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பல்கலைக் கழக இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தினர். 

ஆனாலும் மாணவர்கள் மோதலை நிறுத்தவில்லை. இதில் கல்வீசித் தாக்கியதில் பேராசிரியர் ஒருவர் காயமடைந்தார். தகவலறிந்து வந்த தரமணி காவல் நிலைய போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பல்கலைக் கழக நிர்வாகம் இன்று மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்படுவதை தவிர்க்க பல்கலைக் கழகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்