Skip to main content

முதுகலை ஆசிரியர் தேர்ச்சி பட்டியல் வெளியீடு

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
முதுகலை ஆசிரியர் தேர்ச்சி பட்டியல் வெளியீடு

3 ஆயிரத்து 375 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இதற்கு  2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல்,வணிகவியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல், அரசியல், அறிவியல், உயிரிவேதியியல், நுண்உயிரியல், மனை அறிவியல், தெலுங்கு, உடற் பயிற்சி இயக்குனர்கள் (கிரேடு - 1) ஆகிய 17 பாடங்களுக்கு நடந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.  http://www.trb.tn.nic.in  -ல் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்றும் பணி நியமனம் குறித்த அறிவிப்பை, பள்ளி கல்வித்துறை வெளியிடும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்