பி.வி.ஆர், ஐநாக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் இயங்காது
சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள உள்ளாட்சி கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பி.வி.ஆர், ஐநாக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் இயங்காது என இந்திய மல்டிபிளக்ஸ் அசோஷியேசன் தெரிவித்துள்ளது. தமிழ்திரைப்படங்களுக்கு 10 சதவிகிதமும், தமிழ் அல்லாத மற்ற மொழி திரைப்படங்களுக்கு 20 சதவிகிதமும் உள்ளாட்சி கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்தது. செப்டம்பர் 27 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த இரட்டை வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மல்டிபிளக்ஸ் அசோஷியேசனில் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் தவிர மற்ற திரையரங்குகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.