புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தமிழ் பிளக்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருபவர் முருகானந்தம். சில மாதங்களுக்கு முன்பு இந்து முன்னனியின் ஆலங்குடி நகரத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தந்தை கணேசன் ஆகியோர் நேற்று இரவு 10.30 மணியளவில் அவர்களது அலுவலகத்தில் பிளக்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alangudi_0.jpg)
அப்போது அங்கு வந்த ஜகுபருல்லா மற்றும் அவரது நண்பர்கள் முருகானந்தம், அவரது தந்தை கணேசன் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஒடியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச் சம்பவத்தை கேள்விப்பட்டு முருகானந்தம் உறவினர்கள் ஆலங்குடியில் சில வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது இதனையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alangudi2.jpg)
இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மண்டல டிஐஜி பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை எஸ்.பி., செல்வராஜ் ஆகியோர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் ஜபருல்லா தரப்பை சேர்ந்த ஒரு இளைஞர் புதுக்கோட்டைக்கு பேருந்தில் செல்வதை அறிந்த முருகானந்தம் உறவினர்களான பல இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்று வம்பனில் அந்த இளைஞரை இறக்கி உடைத்து உதைத்து துடிதுடிக்க போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அமைதி நிலை திருப்பிய ஆலங்கடியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. படுகாயத்துடன் துடித்துக் கொண்டிந்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alangudi3_0.jpg)
இந்த நிலையில் இந்துமுன்னனி முருகானந்தம் தாக்கப்பட்ட தகவல் அறிந்து இந்துமுன்னனி பிரமுகர்கள் ஆலங்குடி வரத் தொடங்கினார்கள். தகவல் அறிந்த அவர்களை வரவிடாமல் வழியிலேயே தடுத்து போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் பதற்றத்தை குறைக்கவும், மேலும் இது பொன்ற சம்பவம் நடக்காமல் இருக்கவும் இரு தரப்பினரையும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்த சம்பவம் ஏன் நடந்த்து என்று போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முருகானந்தம் தரப்பினருக்கும் ஜகுபருல்லா தரப்பிற்கும் வாய்த்தகராறில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே காரணமாக ஜகுபருல்லா தரப்பினர் முருகானந்தத்தையும் அவரது தந்தையும் வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 15 நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு அப்போதே போலிசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இது பொன்ற கொடூர சம்பவங்கள் நடந்திருக்காது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். இந்த நிலையில் கடையடைப்பு போராட்டம் நடத்த முருகானந்தம் தரப்பினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)