
கரோனா இரண்டாம் அலை மிகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் காரணமாக தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதிகப்படியான தொற்று இருந்து வரும் இந்த நிலையில், உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி 4500 உயிரிழப்புக்கள் இந்தியா முழுவதும் தினசரி பதிவாகி வருகிறது. குறிப்பாக கடந்த 27 நாளில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ஏப்ரல் 27ம் தேதி 2 லட்சமாக இருந்து உயிரிழப்பு தற்போது மூன்று லட்சத்தை கடந்துள்ளது. மிக வேகமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதே இந்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.