Skip to main content

'நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த நிலைமையா?'- மாவட்ட ஆட்சியர் முன் கதறிய முன்னாள் ராணுவ வீரர்

Published on 05/05/2025 | Edited on 05/05/2025
'Is this the situation I am in after saving the country?' - Former Army soldier cries before the District Collector


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியின் வேப்பங்குப்பம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தேவசகாயம் மனு அளித்தார். அப்போது "எனது மச்சான் என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டான். இது குறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் முறையாக விசாரிக்கவில்லை. என்னையே அழைத்து மிரட்டுகிறார்கள்.

நாட்டை காப்பாற்ற கஷ்டப்பட்ட எங்களுக்கு இந்த நிலைமையா? காவல்துறை சரியில்லை'' என தனது ஆதங்கத்தைக் கூறி கதறினார். உடன் வந்திருந்த அவரது மனைவி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து அழுதார். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் முன்னாள் ராணுவ வீரருக்கு ஆறுதல் கூறி, காவல் துறையை முறையாக விசாரிக்க சொல்கிறேன் எனக் கூறி சென்றார்.

சார்ந்த செய்திகள்