நீட்டை ரத்து செய்..!
இயக்குநர் களஞ்சியம் ஆர்ப்பாட்டம்

தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் அந்த அமைப்பின் திருமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழர் நலம் பேரியக்கம் இயக்குநர் மு.களஞ்சியம் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, நீட் என்ற பிசாசை கொண்டு வந்த தமிழக ஏழை மாணவர்களை வஞ்சிக்கிறது மத்திய அரசு. அதற்கு மாநில அரசு துணை போகிறது. இந்த தேர்வால் ஏழை மாணவர்களின் கனவு கருகிப் போகிறது. அப்படித்தான் அனிதாவின் கனவு கருகியது. நீட்டை ரத்து செய்வதுடன் மாநில கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் மாநில நலனில் மத்திய அரசு தலையிடுவதை நிறுத்த வேண்டும்.
சகோதரி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றார்.
- இரா.பகத்சிங்