Skip to main content

நக்கீரன் இணைய செய்தி எதிரொலி... கரோனா சிகிச்சைக்கு கூடுதல் ஆக்ஸிஜன், மருந்துகள் கேட்டு அமைச்சர் மெய்யநாதன் கோரிக்கை!

Published on 09/05/2021 | Edited on 09/05/2021
h


வேகமாகபரவி வரும் கரோனா கடந்த முதல் அலையைவிட இரண்டாவது அலை மோசமாக உள்ளது. மூச்சுத்தினறல் அதிகரித்து இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு கரோனா சிகிச்சை மையத்திலும் ஆக்ஸிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள், சத்தான உணவு அவசரமாக வழங்க புதிய அரசு உடனடியாக நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நக்கீரன் இணையத்தில் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தோம்.கரோனா இந்த நிலையில் இன்று சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில்... 

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் பற்றாக்குறையாக உள்ளது. அதாவது தற்போதைக்கு ஒருநாளைக்கு 3720 கி.லி தேவையாக உள்ளது. ஆனால் 2.5 ஆயிரம் கி.லி. தான் உள்ளது. ரிசர்வ் கையிருப்பு 1000 கிலோ உள்ளது. உடனடியாக தேவை குறைந்தது 6000 கி.லி. மேலும் மொத்த கொள்ளளவு 12 ஆயிரம் கி.லி இதனை தினசரி நிரப்ப முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதுக்கோட்டை மருத்துக்கல்லூரியில் தற்போது 198 ரெம்டெசிவர் மருந்துகளே உள்ளது. அவசரத் தேவைக்காக மேலும் 2000 ரெம்டெசிவர் மருந்துகள் உடனடியாக தேவைப்படுகிறது. அதே போல ஆக்ஸிஜன் கண்காணிப்பு மீட்டர் 300 கூடுதலாக தேவை உள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் மெய்யநாதன் நம்மிடம் கூறும் போது... புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் குறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் மருத்துவக்கல்லூரி டீன் பூவதி ஆகியோருடன் கருத்து கேட்ட பிறகு முதல்கட்டமாக அவசரமாக தேவைப்படும் ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகள், கண்காணிப்பு மீட்டர் ஆகியவை மருத்துவ அமைச்சரிடம் கேட்டிருக்கிறேன். உடனடியாக ஆக்ஸிஜன் வந்துவிட்டது. மற்றவைகளும் உடனே கிடைக்கும். மேலும் கரோனா நோயாளிகளுக்கு தேவையான தரமான சிகிச்சை, உணவு மற்றும் அவர்களுடன் வருவோருக்கு தங்கவும் உணவுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், அரசு மகளிர் கல்லூரி விடுதி, மன்னர் கல்லூரி, மகளிர்கல்லூரிகளில் கண்காணிப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது என்றார்.மேலும் தமிழகம் முழுவதும் ஆக்ஸிஜன் கண்காணிப்பு மீட்டர் பற்றாக்குறையை உடனே சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சிகிச்சை மைங்கள்.

 

சார்ந்த செய்திகள்