மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக்கால்வாய்கள் மூலம் பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணையில் இருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்கள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்படி, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மேட்டூர் அணையில் இருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.